Latest News

» நிருபமா ராவின் இலங்கை விஜயம்


இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள நிருபமா ராவ் அம்மையார் அதன் பின்னர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு நாளை மறுதினம் கொழும்பு வருகின்றார். அவர் இரண்டு நாள்கள் கொழும்பில் தங்கியிருப்பார் எனத் தெரி விக்கப்படுகின்றது.
இது சாதாரணமாக அயல்நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் இரு தரப்பு உறவு தொடர்பான விட யங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்குடன் கொழும் புக்கு மேற்கொள்ளும் வழமையான விஜயம் என்றே அதிகார மட்டத்தினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவ காரச் செயலாளரின் விஜயத்துக்கு அர்த்தங்கள் அதிகம் உள் ளன என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.
நிருபமா ராவ் அம்மையார் இலங்கைக்குப் புதியவரல்லர். இலங்கை தொடர்பான இந்தியாவின் கடந்த முப்பத்தி யைந்து ஆண்டு காலச் செயற்பாடுகளில் அதிக பங்களிப்புக் காட்டிய  சேவையில் உள்ள  இந்திய உயரதிகாரி ஒருவர் என்று இப்போது யாரையேனும் புதுடில்லி பக்கத்தில் சுட்ட முடியும் என்றால் அது நிருபமா ராவ் அம்மையாராகத்தான் இருக்க முடியும்.
இலங்கை விடயத்தைக் கையாளும் புதுடில்லியின் அதிகார வர்க்கத்தின் பிரிவில் நிருபமா ராவ் நேரடியாகச் சம்பந்தப்பட் டிருந்த காலத்தில் எல்லாம், இலங்கை விடயத்தில் இந்தியா தள்ளி நிற்காமல் நேரடியாக ஈடுபாடுகாட்டி வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இது சில சமயங்களில் சந்தர்ப்பவச மாகவும் நேர்ந்திருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை.
எண்பதுகளின் பிற்பகுதிகளில் இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்டது. ஈழத் தமிழர் பிரச்சி னையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு இலங்கைப் பிரச் சினைக்குள் அது புகுந்தது. தன்னுடன் ஒரு கட்டாய ஒப்பந் தத்துக்கு கொழும்பு அடிபணிந்து வரும் அளவுக்கு புதுடில்லி பல்வேறு வகையான  தந்திரோபாய  அழுத்தங்களை அப் போது கொடுத்தது. அந்த ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு தனது படைகளை இலங்கையின் வடக்கு, கிழக்கிற்கு  தமிழர் தாயகத்துக்கு  அனுப்பி அதை ஆக்கிரமிக்கவும் செய்தது.
இந்தக் காலகட்டத்தில் கொழும்புக்கான இந்தியத் தூது வராக ஜே.என். டிக்ஸிற் இருந்தார். அச்சமயம் அந்தத் தூதர கத்தின் முதல் செயலாளராக இருந்தவர் இதே நிருபமா ராவ் அம்மையார்தான்.
அதன் பின்னர், நிருபமா ராவும் கொழும்பிலிருந்து பிற இடங் களுக்கு இடமாற்றம் பெற, புதுடில்லியும் சுமார் ஒன்றரை தசாப்தகாலம் இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடாமல் பார்த்திருக்கும் பண்பியல்பைப் பின்பற்றி யமை அவதானிக்கத்தக்க விடயமாகும்.
மீண்டும் இந்த மிலேனியத்தின் முதலாவது தசாப்தத் தின் நடுப் பகுதியில், இலங்கை விவகாரத்தில் இந்தியா வின் தலையீடு  வெளிப்படையாக இல்லாவிட்டாலும்  ஒளிவுமறைவாகவும் சத்தம்  சந்தடியின்றியும் மெல்ல மெல்லத் தலையெடுத்து விரிவடைந்தது.
இலங்கை அதிபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சமயத்தில் கொழும்புக்கான தூதுவர் பதவியில் இருந்தவர் நிருபமா ராவ்தான்.
அச்சமயம் பிரதான எதிர்க்கட்சியாகவிருந்த ஐ.தே.கட்சி யுடன் அணி சேர்ந்திருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான நட் புறவு முறுகலடைந்த நிலையில், கொழும்பில் தனது உத்தி யோகபூர்வ இல்லமான "இந்திய ஹவுஸ்' மாளிகைக்கு இரு வரையும் அழைத்து, விருந்து கொடுத்து, சமரசப்படுத்தி வைத்தவரே நிருபமா ராவ் அம்மையார்தான். அவ்வளவு தூரம் அவருக்கு இலங்கை அரசியல் விவகாரங்களில் அதீத செல்வாக்கு இருந்தது.
அந்தக் காலகட்டத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்தை இராணுவ ரீதியில் சிதைத்து அழிக்கும் திட் டத்தை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வகுத்து செயற் படுத்தத் தொடங்கினார்.
அப்போது முதல் 2009 மே நடுப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றிகரமாக நடத்தி முடிக் கப்பட்டது என இலங்கை அரசு அறிவிக்கும் வரை இலங்கை யுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து இலங்கைத் தமிழர்களுக்குக் கசப்பான  விரக்தியான  எரிச் சலான  சீற்றமான   ஆவேசமான  கருத்துணர்வு உண்டு என்பது வெளிப்படையானது.
அத்தகைய ஒரு கருத்து நிலைப் போக்கை, இலங்கைத் தமிழர் விடயத்தில் புதுடில்லி கைக்கொள்வதற்கான கால் கோள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை ஏற்ற சமயத்தில்  நிருபமா ராவ் அம்மையார் கொழும்புக்கான இந் தியத் தூதர் பதவியை அலங்கரித்த வேளையில்தான்  இடப் பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.
இத்தகைய விதத்திலான இந்தியத் தலையீட்டுக்கு முழுக் காரணம் நிருபமா ராவ்தான் என்று நாம் குற்றம் சுமத்து கிறோம் என யாரும் கருதிவிடக் கூடாது. ஆனால் சந்தர்ப்ப வசமாகவோ என்னவோ, இலங்கை விவகாரத்தைக் கையாளும் புதுடில்லித் தரப்பில் நிருபமாராவ் சம்பந்தப்பட்ட காலத் திலேயே, ஈழத் தமிழருக்கு விசனத்தையும், எரிச்சலையும் ஊட்டும் விதத்திலான செயற்போக்கை அல்லது செயற்றிற னின்மையை இந்தியா வெளிப்படுத்தி வந்திருக்கின்றது என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.
இப்போதும் இலங்கையில் பொதுத் தேர்தல் சமயம். தமிழர் தரப்பில் அதிக பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, "இந்தியாவின் எடு பிடியாகி விட்டது, புதுடில்லியில் ஏவல் நாயாகிவிட்டது' என்றெல்லாம் கூட்டமைப்புக்கு எதிராகக் கடும் பிரசாரங் கள் சில தரப்புகளினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் சமயத் தில் நிருபமா ராவ் அம்மையார் கொழும்பு வருகின்றார்.
இந்த வருகையின் பின்புலம் என்னவென்பது இனித் தான் அம்பலமாகும். அற்காகப் பொறுத்திருப்போம்.


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.