Latest News

» வெளிநாட்டில் செயற்படும் புலிகளின் அமைப்புகள் தமது தலைவர் பிரபாகரனைத் தேடும் முயற்சியில்! இலங்கைத் தரப்பு கவலையுடன் இந்தியாவிடம் தெரிவிப்பு

2010-03-09 07:23:46   

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள அந்த இயக்கத்தின் முன்னணி அமைப்புகள் ஈடு பட்டுள்ளன எனக் கவலை வெளியிட் டுள்ள இலங்கை, அதனை இந்தியாவிற் கும் தெரியப்படுத்தியுள்ளது.


கொழும்பு, மார்ச் 09
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள அந்த இயக்கத்தின் முன்னணி அமைப்புகள் ஈடு பட்டுள்ளன எனக் கவலை வெளியிட் டுள்ள இலங்கை,  அதனை இந்தியாவிற் கும் தெரியப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் உடனான சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் றோஹித               போகொல்லாகம இதனைத் தெரி வித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சில தமது தலைவர் வேலுப் பிள்ளை
பிரபாகரனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அரசு இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் உடனான சந்திப்பின்போது எமது இந்தக் கவலையைத் தெரிவித்தோம்.
இலங்கை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கும். இறைமையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம்.
நிருபமாராவ் உடனான சந்திப்பின்போது, பயங்கரவாதம் குறித்தும் சர்வதேச ரீதியிலான விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் குறித்தும் நாங்கள் கொண்டுள்ள கவலையை அவருக்குத் தெரியப்படுத்தினோம்.  என அவர் குறிப்பிட்டுள்ளார். (அசி)

Comments


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.