Latest News

» போராடவும், சேவை புரியவும் கூடிய தமிழர் அரசியல் சக்தியைத் தெரிவு செய்க த.ம.வி.பு.கட்சியின்அம்பாறை வேட்பாளர் வலியுறுத்து

2010-03-11 22:17:08   

"அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷைகள், சூழ்நிலை கள் ஏனைய மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களைவிட மிகவும் வேறுபாடானது. அந்தவகையில் உரிமை, சுயநிர்ணயம் என ஒருபுறம் போராடவும், அபிவிருத்தி, கட்டுமானம் என மறுபுறம் சேவை புரியக் கூடிய ஒரே பார்வை கொண்ட



அம்பாறை,மார்ச்12
"அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷைகள், சூழ்நிலை கள் ஏனைய மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களைவிட மிகவும் வேறுபாடானது. அந்தவகையில் உரிமை, சுயநிர்ணயம் என ஒருபுறம் போராடவும், அபிவிருத்தி, கட்டுமானம் என மறுபுறம் சேவை புரியக் கூடிய  ஒரே பார்வை கொண்ட இரு கண் கள் போன்று செயற்படக்கூடிய அரசியல் சக்தியைத் தமிழ் மக்கள் பெறவேண்டும்.'
இவ்வாறு கணபதிபுரம்  மல்வத்த யில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி யின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கே. தியாகு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு:
கடந்த ஆறு தசாப்தமாக அஹிம்ஸை வழியிலும், ஆயுதப் போராட்டத்திலும் ஈடு பட்டு எதனையுமே நாம் காணாது, அழிவு களையும், இழப்புகளையும் கண்டதே மீத மாகியுள்ளது.
மேலும் உரிமை, சுயநிர்ணயம் என்பன ஒரு கண் போலவும், அபிவிருத்தி கட்டு மானம் என்பன மறுகண்ணாகவும் கொண்ட தான ஒரே பார்வை உடையதான அரசியல் வழியில் தமிழ் மக்கள் பலமடைய வேண்டும்.
இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து எமது மக்கள் தங்களது எதிர் காலத் தலைவிதியைத் நிர்ணயிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி "படகுச் சின்னத்தில்' போட்டியிடுகின்றது.
அது நிச்சயம் அம்பாறை மாவட்டத் தில் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றே தீரும் என்பதை நாம் செல்லுமிடமெல்லாம் மக்கள் நிரூபித்து வருகிறார்கள்  என் றார்.
(சி)

Comments


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.