Latest News

» யாழ். தேர்தல் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 7ஆயிரத்து 464 பேர் தகுதி

2010-03-11 22:19:51   

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தபால் மூலம் வாக் களிக்க 7ஆயிரத்து 464 பேர் தகுதிபெற் றுள்ளனர் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு



 யாழ்ப்பாணம்,மார்ச்12
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  யாழ்.மாவட்டத்தில் தபால் மூலம் வாக் களிக்க 7ஆயிரத்து 464 பேர் தகுதிபெற் றுள்ளனர் என்று யாழ்.மாவட்ட  உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு
எதிர்வரும் எப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்த லில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 8 ஆயிரத்து 303 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களின் 839 பேரின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பான காரணங்கள் உடனுக்குடன் உரிய வாக்காளர் களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாமை, பல்வேறு தகவல்கள் சரியான முறையில் வழங்கப்படாமை ஆகிய காரணங்களுக்காக 839 விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள வேட்பாளர்களுக்குரிய வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட அத்தாட்சிப் படுத் தும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெற வுள்ளது.   என்றார்.
இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த 94 வாக்காளர்களின் விண் ணப்பங்கள் காலதாமதமாகக் கிடைக்கப் பெற்றதால் அவை நிராகரிக்கப்பட்டுள் ளன.                                       (509)

Comments


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.