» தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் இணையத்தளத்திற்குத் தடையாம்
2010-03-11 22:21:54
தேர்தல் மோசடிகள், முறைகேடுகள், வன்முறைகள், தேர்தல் சட்டங்களை மீறி யமை, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைளில் உண்மைத்தன்மை, நடுநிலைமை தவறா மல் செயற்பட்டுவரும் கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு தடை ஏற்படுத்தப் பட்டுள்ளது என இணையத் தளத் தகவல
கொழும்பு,மார்ச்12
தேர்தல் மோசடிகள், முறைகேடுகள், வன்முறைகள், தேர்தல் சட்டங்களை மீறி யமை, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைளில் உண்மைத்தன்மை, நடுநிலைமை தவறா மல் செயற்பட்டுவரும் கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு தடை ஏற்படுத்தப் பட்டுள்ளது என இணையத் தளத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
கபே அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்க ளாக இலங்கையில் பார்வையிட முடியாதுள் ளது எனவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக் கூடிய அனைத்து வழிகளுக் கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் புரொக்ஷி இணையத்தள வழியா கவும் அதனைப் பார்வையிட முடியாதுள் ளது எனவும் கபே அமைப்புத் தெரிவித்தது என அந்தச் ö\´தியில் குறிப்பிடப்படுகிறது.
கூடிய விரைவில் இந்த நிலைமை யைச் சரி செய்து தகவல் அறியும் மக்க ளின் உரிமையை உறுதிப்படுத்துமாறு கபே அமைப்புக் கோரியுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளமான கபே இணையத்தளத்திற்கு இயற்கையாக குறுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டு தடை ஏற் படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை யானது திட்டமிட்டதும் மிகவும் நுட்ப மான முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தடை என கபே அமைப்புக் குறிப்பிட் டுள்ளது.
இந்த சீர்குலைப்பு நடவடிக்கையைத் தடுப்பதற்காக கபே அமைப்பு தனது உச்ச சக்தியைப் பயன்படுத்தி மீண்டும் இணை யத்தளத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் தெரி விக்கப்படுகிறது. (சி)