Latest News

» யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த சீனத்தூதுவர் வீதி அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டார்

2010-03-11 22:34:15   

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சீனத் தூதர் திருமதி யாங் ஸியுபிங் அடங்கிய குழுவினர் பண்ணைப் பாலத்தின் அபிவிருத் திப் பணிகளை நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.





Hi Jeya
யாழ்ப்பாணம்.மார்ச்12
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கை மற்றும்
மாலைதீவுக்கான சீனத் தூதர் திருமதி யாங் ஸியுபிங் அடங்கிய குழுவினர் பண்ணைப் பாலத்தின் அபிவிருத் திப் பணிகளை நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

இதில் தூதுவரின் செயலாளர் மற் றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வடமாநில அபிவிருத்திப்  பிரிவின் பணிப்பாளர் நாயகம் பி.எச்.பஸ்ஸபெரும ஆகியோர் அடங்கியிருந்தனர்.
யாழ்.அரச அதிபர் கே.கணேஷ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகர் ஆகியோர் வீதி அபிவிருத்திப் பணி கள் தொடர்பாக இக்குழுவினருக்கு விளக்கமளித்தனர்.
சீன நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி,  பருத்தித்துறை வீதி, மீசாலை வீதி ஆகியவற்றையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர்.(5016)

Comments


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.