2010-04-28 21:04:32
"இந்துக்களின் போர்' நாளை ஆரம்பம்; முதலாவது வெற்றியைப் பெறுபவர்கள் யார்?

யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட்டுக்கு எனத் தனியான மகத்துவம் உண்டு என் பதை எவராலும் மறுக்க முடியாது. விளை யாட்டுத் துறையில் சாதனை படைக்கக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்க ளின் தெரிவாகவும் கிரிக்கெட் அமைந் துள்ள நிலையில் பல பாடசாலைகளும் பெருந்துடுப்பாட்டப் போட்



யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட்டுக்கு எனத் தனியான மகத்துவம் உண்டு என் பதை எவராலும் மறுக்க முடியாது. விளை யாட்டுத் துறையில் சாதனை படைக்கக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்க ளின் தெரிவாகவும் கிரிக்கெட் அமைந் துள்ள நிலையில் பல பாடசாலைகளும் பெருந்துடுப்பாட்டப் போட்டிகளில் கவ னம் செலுத்தி வருகின்றன.
சர்வதேச உலகில் ருவென்ரி  20 போட் டிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த வேளையில் யாழ்ப்பாணத்தின் துடுப்பாட் டப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் இணைந்து "இந்துக்களின்  போர் ' பெருந்துடுப்பாட்டத்தை ஆரம்பித்தன.
மூன்றாவது வருடமாக நடைபெற வுள்ள இந்தப் போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை நடந்த இருபோட்டிகளும் சமனிலையிலேயே முடிவுற்று உள்ளன. இம்முறை நடைபெறும் போட்டியில் தாமே வெற்றி கொண்டு முதலாவது வெற்றி என்ற வரலாற்றுப் பதிவைத் தமதாக்கிக்  கொள்ள வேண்டும் என்ற மனநிலையிலேயே இரு கல்லூரிகளும் களமிறங்கவுள்ளன.
இந்த வருடம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு வருடம் என்ப தால் முதல் வெற்றியைப் பெற்று கல்லூ ரிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொக்குவில் இந்துவின் அணியினர் கே.நிறோஜன் தலைமையில் பல வியூகங்களை வகுத்து உள்ளனர்.
ஆனால் யாழ்.இந்துவின் வீரர்கள் கொக் குவில் இந்துவை வீழ்த்தி முதலாவது வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண் ணத்தில் பல வியூகங்களை வகுத்து ஆர். நிறோஜன் தலைமையில் களமிறங்குகின் றனர். இரு அணிகளுமே இவ்வருடம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி தோல்வி களை சந்தித்துள்ளனர்.
எது எவ்வாறு இருந்த போதிலும் ரசி கர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந் துக்களின் போரில் வெற்றி பெற்று முதல் வரலாற்று வெற்றியைப் பொறிக்கப் போகும் அணி எது என்பது முதலாம் திகதி மாலை தெரிந்து விடும்.          

Hi JeyaHi Jeya
Hi Jeya







Ad spot 125x125 Ad spot 125x125 Ad spot 125x125

LK

World

Cinema

Business

Technology