வீடு விற்பனைக்குண்டு
 
 
40ஆவது ஆண்டு நிறைவு விழா
 
 
மணமகன் தேவை
 
 
இணையதள வடிவமைப்பாளர்
 
     
யாழ் விளையாட்டுத் திடல்
தேர்வு செய்யவும
15 வயதுப் பிரிவு கிரிக்கெட் போட்டியில் முதலிரு இடங்ளைப் பெற்ற அணிகள் தெற்குக்கு! முதலாவது ஆட்டம் அனுராதபுரத்தில் இன்று
[03 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 1:45 மு.ப இலங்கை]
  இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினல் யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கி அனுசரணையுடன் நடத்தப்பட்ட 15 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கல்லூரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தென்னிலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளன.
யாழ்.கல்விக் கோட்ட உதைபந்தாட்டம்: போராடிச் சாதித்தது சென்.பற்றிக்ஸ்
[03 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 1:40 மு.ப இலங்கை]
  யாழ்ப்பாணம் கல்விக்கோட்டப் பாட சாலை அணிகளுக்கிடையே இடம்பெற்ற 18 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பாடசாலைகள் வலைப்பந்தாட்டம் யாழ்.இந்து மகளிரும் கொக்குவில் இந்துவும் இறுதியாட்டத்தில் மோதத் தகுதி பெற்றன
[03 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 1:40 மு.ப இலங்கை]
  கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை யின் புத்தாண்டுப் பூர்த்தியை ஒட்டி நடத்தப்பட்டுவரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மோத யாழ்.இந்து மகளிர் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் தகுதி பெற்றுள்ளன.
சண்டிலிப்பாய் கோட்ட தாச்சி இறுதியாட்டத்தில் பெரியவிளான் வென்று கேடயம் சுவீகரித்தது
[03 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 1:40 மு.ப இலங்கை]
  சண்டிலிப்பாய் கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஆரம்பப்பிரிவு ஆண்களுக்கான தாச்சிச் சுற்றுப்போட்டியில் பெரியவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ்.விளையாட்டு விழா இன்றும் நாளையும் முன்னைய சாதனைகள் முறியடிக்கப்படுமா?
[03 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 1:40 மு.ப இலங்கை]
  யாழ்.மாவட்டப் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
யாழ்.பாடசாலைகளுக்கு இடையே முதல்முறையாக 20/20 சுற்றுப்போட்டி
[01 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 10:25 மு.ப இலங்கை]
  யாழ்ப்பாணம் பாடசாலைகளுக்கு இடையே முதல்தடவையாக இருபது இருபது கிரிக்கெட் சுற்றுப்போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்தவார இறுதியில் இடம்பெறவுள்ளது.
தெல்லிப்பழை ஆரம்பப் பிரிவு தாச்சி; பன்னாலை கனகசபை சம்பியனானது
[01 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 10:25 மு.ப இலங்கை]
  தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பனை குடும்பப் பாடசாலை களுக்கு இடையே இடம்பெற்ற ஆரம்பப் பிரிவு ஆண்களுக்கான தாச்சிச் சுற்றுப் போட்டியில் பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
தேசிய மட்டப் போட்டிகள் கோலூன்றிப் பாய்தலில் யாழ்.மாணவி தனுசா தங்கப் பதக்கம் சுவீகரித்து சாதனை படைத்தார் யாழ்.மாவட்டத்துக்கு இதுவரை 7 பதக்கங்கள்
[01 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 10:15 மு.ப இலங்கை]
  கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பாடசாலை களுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் 17 வயப்பிரிவில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி சண்முகராசா தனுசா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் சுவீகரித்துச் சாதனை புரிந்துள்ளார்.
15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் சென். பற்றிக்ஸ் யூனியன் கல்லூரி அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் கடும் பலப்பரீட்சை
[17 செப்டம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை]
  யாழ்.மாவட்டத்தில் முதல் தடவையாக 15 வயதுப்பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று புதன்கிழமை காலை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது
சிதம்பரக் கல்லூரி வீரன் வசிகரனுக்கு ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம்
[17 செப்டம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை]
  மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவன் ச.வசிகரன் தங்கம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். கடந்தவாரம் வவுனியாவில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவன் சண்முகநாதன் வசிகரன் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தெல்லிப்பழை அணி மாவட்டச் சம்பியனானது
[17 செப்டம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை]
  யாழ்.மாவட்டப் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய மென் பந்துக் கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகக் கிரிக்கெட் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வளங்கள் போதியளவு இல்லாதபோதும் சாதிக்க வேண்டும் என்ற அவா வெற்றியைத் தந்தது தேசியமட்ட சம்பியன் நிலைபெற்றது குறித்துப் பெருமிதமடைகிறார் அன்ரனீஸ் அதிபர்
[15 செப்டம்பர் 2008, திங்கட்கிழமை 10:10 மு.ப இலங்கை]
  வளங்கள் போதியளவு இல்லாத போதும் சாதிக்க வேண்டும் என்ற அவா இன்று எமது கல்லூரியை தேசிய மட்ட சம்பியனாக உயர்த்தியுள்ளது. இப்படிப் பெருமிதமடைகின்றார் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் ஜே.ஏ. யேசுதாஸ்.
தேசிய மட்டத்திலான உதைபந்தாட்டம்; மானிப்பாய் இந்து 3ஆம் இடத்தை தட்டிக் கொண்டது
[08 செப்டம்பர் 2008, திங்கட்கிழமை 12:25 பி.ப இலங்கை]
  நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய மட்ட உதைபந் தாட்டப் போட்டியில் 17 வயது ஆண்கள் பிரிவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
வடமராட்சியில் இன்றும் நாளையும் இறுதியாட்டங்கள்
[06 செப்டம்பர் 2008, சனிக்கிழமை 2:55 மு.ப இலங்கை]
  பருத்தித்துறை உதைபந்தாட்டலீக் நெல்லியடி செல்லமுத்தூஸ் புடைவைய கத்தின் அனுசரணையுடன் வடமராட்சிப் பிரதேச அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள், வங்கிகளின் விளை யாட்டுக் குழுக்களுக்கிடையே நடத்தி வரும் உதைபந்தாட்ட, துடுப்பாட்டச் சுற் றுப் போட்டிகளின் இறுதியாட்டங்களும் பரிசளிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை யும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடை பெறவுள்ளன.
கொக்குவில் இந்து அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி
[05 செப்டம்பர் 2008, வெள்ளிக்கிழமை 2:00 மு.ப இலங்கை]
  கொக்குவில் இந்துக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணியினர் இறு திப் போட்டியில் விளையாடத் தகுதி பெற் றுள்ளனர். இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பாட சாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் யாழ்ப் பாணப் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் முதல் சுற் றில் விளையாடிய மூன்று பிரிவுகளில் இருந் தும் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.
பிந்திய செய்திகள்
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக புலம்ழ்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் - அந்நாட்டு எம்.பிக்களும் பங்கேற்பு
வன்னி அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி வழங்கும் - இந்தியத் தூதர் தெரிவிப்பு
ஊடகவியலாளர் திஸநாயகம் மகஸின் சிறைக்கு மாற்றம்! - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்
அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்துக்கு 24 மணிநேர மின்சாரம்
இந்திய நிவாரணப் பொருட்கள் அடுத்தவாரம் வன்னி செல்லும் - நேற்று செஞ்சிலுவைக் குழுவிடம் ஒப்படைப்பு
பூநகரியிலிருந்து நகர்ந்தமை புலிகளின் தந்திரோபாயமா? - அப்படி ஒன்றும் கிடையாது என்கிறது அரசு
முதலாம் திகதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாட்டில்
போரில் புலிகளை அழித்தபடியே தமிழ் ம்க்களுக்கு அரசியல் தீர்வு - இரண்டையும் ஒரே நேரத்தில் முடிப்பதே அரசின் திட்டம் என்கின்றார் அமைச்சர்
திருவாரூர் சென்ற ரணிலை மறித்து கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கலாட்டா
முகமாலை முன்னரங்கை படையினர் மீட்டனராம்!
 
Custom Search
 
Tamil News Web
Advertisements

tamil news